என் முதல் கவிதை நீ!
ரோஜாக்கள் இல்லைபரிசொன்றும் தரவில்லைஎங்கோ ஒளிந்து நின்றுஓரக்கண்ணால் பேசினாய்..வியர்த்துக்கொட்டிவேற்றுக்கிரகத்துக்கு போனவனாய்விக்கித்து நின்றேன்இப்படித்தானே தொடங்கியதுநம் காதல் ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல்..?!! கணக்குப்புத்தகத்தின்கடைசி பக்கத்திலும்அறிவியல் நோட்டின்மிச்சமுள்ள பக்கங்களிலும்எத்தனை முறைஉன் பெயரெழுதி கிறுக்கிஎனக்குள் நானேசிலாகித்திருந்திருப்பேன்..!?? பேச்சுப்போட்டியில்கட்டுரைப்போட்டியில்பாட்டுப்போட்டியில்திருக்குறள் ஒப்புவித்தலில்நான் முதலிடம் வாங்கும் போதெல்லாம் எனக்கே தெரியாமல்நீ கைத்தட்டி ரசித்துஉன் தோழிகளுக்கு காட்டிக்கொடுத்துமேடையிலென்னைமெய்யுருக ரசிப்பாயே..!! நானெழதியமுதல் கவிதையே உன் பெயர் தான்..?!! - ப.ஷேக் அலாவுதீன்திருநெல்லிக்காவல்
source https://tamil.oneindia.com/art-culture/poems/valentines-day-you-are-my-first-poem-411427.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.216.4.27&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/art-culture/poems/valentines-day-you-are-my-first-poem-411427.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.216.4.27&utm_campaign=client-rss
Comments
Post a Comment